ஐ.நா.மனித பேரவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை சட்டபூர்வமானது - மொஹான் பீரிஸ்
ஐக்கிய நாடுகளின் மனித பேரவை க்காக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை சட்டபூர்வமானது எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த எல்.ரி.ரி.ஈ அமைப்பு உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப் பட்டுள்ளது எனவும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி யிலேயே முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை அடிப்படையாக வைத்தே குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், தற்போதைய இலங்கையின் நிலைமைகள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது எனவும் முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாடுகள் இலங்கை மீது எவ்வகையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் அதனை எதிர்த்து இலங்கையின் நற்பெயரை பாதுகாப்போம் என தெரிவித் துள்ளார்.
0 comments :
Post a Comment