Tuesday, October 2, 2012

புத்த மதத்தவரின் வீடுகள், கோயில்கள் வன்முறை கும்பலால் எரித்து சேதம் - வங்கதேசத்தில் சம்பவம்

வங்கதேசத்தில் புத்த மதத்தவர்களின் வீடுகள், கோயில்களை வன்முறை கும்பல் எரித்ததனால் வங்கசேத்தில் பொரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கசேத்தில் உள்ள புத்த மதத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்தை இழிவாக கூறியதாக தகவல் பரவிதாகவும், பேஸ் புக்கிலும் புகைப்படங்கள் வெளியானதையடுத்து இவ்வனர்த்தம் ஏற்றட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் ஒன்று சோந்து தென்கிழக்கு பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் பகுதியில் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றதாகவும், அதனையடுத்து திடீரென புத்த மதத்தவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, புத்தர் கோயில்களையும் தீ வைத்து எரித்ததாகவும், இதனால் பதற்றம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து கலவர பகுதிகளில் ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை இப்போது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன், பேஸ் புக்கில் சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பொலிஸார் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்று வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com