காதலனின் விரலை கடித்து துப்பிய காதலி
கழுத்தை நெரிக்க முயன்ற காதலனின் விரலை காதலி கடித்து துப்பிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் ஜெர்ரி ஸ்டீவன்சன்(வயது 38). இவரது காதலிக்கு வயது 45.
சம்பவத்தன்று ஜெர்ரிக்கும், அவரது காதலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
ஒரு கட்டத்தில் ஜெர்ரி தனது கைத்துப்பாக்கியை எடுத்து காதலியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன காதலி வீட்டுக்குள் ஓடியுள்ளார்.
ஆனாலும் விடாமல் துரத்திய ஜெர்ரி, தனது காதலியின் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்தார். இதையடுத்து ஜெர்ரியின் கையை பிடித்து விரலைப் பலமாக கடித்தார். இதில் ஒரு விரல் துண்டாகி விட்டது.
இதனால் அலறித் துடித்த ஜெர்ரி, துண்டாகிப் போன விரலுடன் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு மருத்துவர்கள் விரலை மீண்டும் ஒட்ட வைத்து அறுவைச் சிகிச்சை செய்து சரிப்படுத்தி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், ஜெர்ரி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
தற்காப்புக்காகவே விரலைக் கடித்ததால் அவரது காதலி மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
0 comments :
Post a Comment