தோல் புற்று நோயை குணப்படுத்த புதிய கிரீம் மருந்து
தோல் புற்று நோயை குணப்படுத்த தற்போது புதிய வகை கிரீம் மருந்தை ஆஸ்திரேலிய நிபுணர்கள் கண்டுபிடித் துள்ளனர். தோல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியான ‘மெலனோமா’ என்றழைக் கப்படும் கருப்பு நிற கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் மெல்போர்ன் ‘ஆர்.எம்.ஐ.டி’ பல்கலைக்கழக நிபுணர்கள் இந்த கிரீம் மூலம் சிகிச்சை மேற்கொண்டனர்.
அதில், நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. தோல் புற்று நோயின் தாக்கம் குறைந்திருந்தது. அந்த ‘கிரீம்’ மருந்தில் உள்ள ரசாயன வேதி பொருள் புற்று நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளையும், புற்று நோய் ‘செல்’களையும் அழிக்கும் திறன் கொண்டது. இந்த மருந்தினால் நோய் பாதிக்காத மற்ற ‘செல்’களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே தோல் புற்று நோயை குணப்படுத்தும் அரிய மருந்தாக இந்த ‘கிரீம்‘ விளங்கும் என நிபுணர் டாக்டர் தக்ரீத் இஸ்டிவான் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment