Thursday, October 18, 2012

பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தியது தவறாம். ஐ.தே.க

2005 ம் ஆண்டில் ரணில் பெற்றதை விட அதிகமான வாக்குகள் பெறுவார் என்றுதான் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக 2010 ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தினோம். ஆனால், அது வீணாகிவிட்டது. அவரால் அதிக வாக்குகள் பெற முடியவில்லை. அதனால் நாங்கள் அப்போது எடுத்த தீர்மானம் தவறு என்று தெரிகிறது என ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க டெய்லி மிரருக்கு கூறியுள்ளார்.

மேலும் பிக்குமார்களும், சரத்பொன்சேகாவும் நாளை நடத்தவிருக்கும் பேரணி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே முடியும். இந்த பேரணி ஐதேகவை பலவீனப்படுத்தி அரசாங்கத்தைப் பலப்படச் செய்யும் என்றும் அவர் கூறுகிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com