நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதாம்!
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு, வாய்ப்பில்லையெனவும், போதுமான அளவு எரிபொருள் கையிருப்பதாகவும், எரிபொருள் விலை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இல்லையெனவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 2 லட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல், இலங்கைக்கு வரவுள்ளதாகவும், கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு சில ஊடகஙகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களையும், கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது.
தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ள நிலையில், அரசாங்கம் சவூதி அரேபியா மற்றும் ஓமானிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 6 முதல் 8 ஆம் திகதிக்கிடையில் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயுடன் கூடிய கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், நவம்பர் 15ம் திகதி முதல் 20 ஆம் திகதிக்குள் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மெட்ரிக் தொன் தாங்கிய கப்பல், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்தார். டிசம்பம் முதல் பகுதியில் ஒரு லட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை கொண்ட கப்பல் வரவுள்ளதாகவும், கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment