Wednesday, October 17, 2012

இரகசிய பொலிசார் இரட்டை வேடம் போடுகின்றார்களாம்

பாரத லக்ஸமன் பிரேமசந்திர கொலை விசாரணையில், இரகசிய பொலிசார் இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்று பிரேமசந்திரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜகத் அபே நாயக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்வில் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

பிரேமசந்திரவின் பொலிஸ் பாதுகாவலரான ஆர். காமினிக்கு ஒரு கரண்டியும், வேறு சந்தேநபர்களுக்கு இன்னொரு கரண்டியும் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காமினியை மருத்துவரின் அறிவுரையின்றி அங்கிருந்து அகற்றக்கூடாது என்று சொல்லியருந்தும் அவரை அகற்றியது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் கொலைச் சந்தேகருக்கு சிஙக்கப்பூரில் மிக ஆடம்பர மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு இடமளிக்கப்பட்டு ள்ளதாகவும், அரசியல் சக்தி மற்றும் சமூக நிலைமைக்கு அமைய அவ்வாறு செய்ய முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியா, துமிந்த சில்வா சிங்கப்பூர் சென்றது அவர் சநதேக நபராக ஆக்கப்பட முன்னர் என்றும், அவருக்கு மண்டையோட்டில் ஒரு பகுதி எடுக்கப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது என்றும், அத்தகைய நிலையில் ஒருவர் உயிர் பிழைத்திருப்பது அதிரஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்

இதேவேளை காமினியை விசேட மருத்துவரின் அறிவுரை யின்றி சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து அகற்றியது ஏன் என்று காரணம் காட்டுமாறு சிறைச்சாலைக்கு உத்தரவிட்ட நீதவான், பொலிஸ் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கும் கட்டளை பிறப்பித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com