போலிச்சாமி நித்தியானந்தா பற்றி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை –சென்னை உயர் நீதிமன்றம்
தன்னை பற்றி தமது சீடர்களான ஆர்த்தி ராவ், லெனின் கருப்பன் ஆகியோர் தவறான கருத்துகளை பத்திரிகைகளுக்கும் தொலைக் காட் சிகளுக்கும் தெரிவித்து வருகின்ற னர் என்றும், அவ்வாறு ஆர்த்தி ராவ், அவரது தந்தை சேதுமா தவன், லெனின் கருப்பன் ஆகியோர் என்னையும் எனது பக்தர்களைப் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கருத்துகள், பேட்டிகள், அறிக்கைகள் அளிக்கக்கூடாது என்றும், அவர்கள் கருத்துக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தம்மைப் பற்றி மற்றவர்களை பேசக்கூடாது என்று தீர்வு கேட்டு நீதிமன்றத்துக்கு வருகிறவர்கள் சுத்தமான கையோடு இருக்க வேண்டும் என்றும், தம்மைப் பற்றி மற்றவர்கள் குறை கூறுவதை தடுப்பதற்கும், அவர்களை வாயடைப்பதற்கும் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்
அத்துடன் நித்தியானந்தா பற்றி மறைப்பதற்கு எதுவுமில்லை. அவரைப் பற்றி முன்னாள் சீடர்கள் கருத்து சொல்வதை தடுக்க முடியாது என்றும், நித்தியானந்தா சம்பந்தப்பட்ட விவகாரம் அக்குவேறு ஆணிவேறாக இந்தியா முழுவதும் அலசி ஆராயப்பட்டுவிட்டது. அவரது விவகாரத்தை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. என தெரிவித்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
0 comments :
Post a Comment