யாழ் மாதகல் பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேற்றம்! மக்களை குடியேற்ற நடவடிக்கை
யாழ் மாதகல் மேற்கு பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறியுள்ளனர் என்றும் மக்களின் மீள்குடியேற்றத்தி ற்காக மாதகல் மேற்கு பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளதென சண்டிலி ப்பாய் பிரதேச செயலாளர் குறிப்பிட் டுள்ளார்.
நீண்டகாலமாக கடற்படையினர் நிலைகொண்டிருந்த குறித்த பிரதேசத்திலிருந்து கடற்படையினர் கடந்த 20 ம் திகதி , வெளியேறியதாகவும், இந்நிலையில் மக்களை மீளக்குடியேற் றுவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட் டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேறுவதற்கு இதுவரை 269 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேசசபை செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுவிக்கப்பட்ட பகுதியில் 212 குடும்பங்கள், தமது வீடுகளுக்கு சென்று காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் வாழ்வாதார திட்டத்தின்கீழ், வீட்டுக்கடன்கள், அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரதேசத்தின் உற்கட்டமைப்பு வசதி, வீதி அபிவிருத்தி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலாளர் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment