சம்மாந்துறை ஆசிரியர் சமூகத்திற்கு பெருமை தேடி தந்த திருமதி பெஸியா சரீப்
மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிரியர் களை கௌரவிக்கும் திட்டத்திற் கமைய ஒவ்வொரு ஆண்டும் ஜனதிபதியினால் விருது வழங்கப் படுகின்றது. இதற்கிணங்க இந்த ஆண்டிற்கான விருது சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் பௌசியா சரீப்பிற்கு கிடைத்துள்ளது.
அத்துடன் அவ்விருதினை பெறவேண்டுமாயின் ஐந்து வருட காலத்தில் 50 நாட்களுக்கு குறைந்த விடுமுறையைப் பெற்றால் மாத்திரமே இந்த அவ்விருதினை பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கிணங்க சம்மாந்துறையில் சென்னல் ஸாஹிறா வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தை பெற்று, சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் பௌசியா சரீப் அவர்கள் தனது ஆசிரியர் சேவையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் அர்பணிப்போடு ஆற்றிய சிறந்த சேவைக்காக, 2012.10.09 ஆம் திகதி ஜனதிபதியினால் "ஆசிரியர் பிரதீபா பிரபா" என்ற விருதினை பெற்று சம்மாந்துறை ஆசிரியர் சமூகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் தெரிவித்துள்ளதுடன், இவரை இப்பாடசாலை அதிபர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் இவர்களை பாராட்டுகிறார்கள்.
அ.ம. தாஹா நழீம்
0 comments :
Post a Comment