டக்ளசிற்கும் மாவைக்கும் இடையிலான சண்டை உச்சகட்டத்தில்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜாவிற்கும் இடையில், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவை சேனாதிராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தினை விட அதிகமான நேரத்தினை தனது உரைக்காக எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா மாவை சேனாதிராஜாவிடம் உரையாடலை நிறுத்துமாறும், நிறுத்தாத பட்சத்தில் ஒலிவாங்கியை முடக்கிவிடுவேன் எனவும், சபையின் தலைவர் என்ற வகையில் அதற்கான அதிகாரம் காணப்படுவதாகவும், டக்ளஸ் தேவானந்த மாவை சேனாதிராஜாவை எச்சரித்துள்ளார்.
எனினும் ஒலிவாங்கியை முடக்கினாலும் உரையை நிறுத்தப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததோடு உரையை நிறுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment