கொள்ளையடித்த பணத்தை மீண்டும் கொண்டு வந்து ஒப்படைத்த வினோத கொள்ளையன்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று காலை 6 மணியளவில் கோண்டாவிலில் சிவன் வீதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கனடாவில் வசிப்பவர் வவுனியாவிலுள்ள ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் 18 லட்சம் ரூபா பணம் கொடுக்க வேண்டியிருந்துள்ளது.
இதனை கடந்த 23ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர் மூலம் அவருக்கு வழங்க முன் வந்தள்ளார்.
அவரும் யாழ்ப்பாணம் வந்து செல்லும் சிரமத்தால் தனது நண்பரை அனுப்பி அதனை பெற்று வங்கியில் வைப்பு செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த பணத்தை அன்றைய தினமே வங்கியில் வைப்பு செய்யுமாறு நண்பருக்கு தெரிவித்தபோதும் அவரால் வைப்பு செய்ய முடியவில்லை.
இதனால் வீட்டிலேயே வைத்திருந்துள்ளார்.
அடுத்தநாள் காலை ஆறு மணியளவில் துப்பாக்கி முனையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பணத்தை இழந்தவர் கோப்பாய் பொலிஸிலும் உடனடியாக அன்றைய தினமே முறைப்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் அடுத்தநாள் அதிகாலை கொள்ளையடித்த வீட்டின் குப்பை கொட்டும் பகுதியில் சிவப்பு நிறபை ஒன்றில் குறித்த பணம் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வந்து போடப்பட்டிருந்தது.
பணத்தை பறிகொடுத்தவர் இதனை அவதானித்த உடன் பொலிஸாhருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பணத்தை மீட்டுச் சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் திரும்ப கொண்டு வந்து போட்டப்பட்டது பொது மக்கள் மத்தியில் கடும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment