இளைஞர் யுவதிகளுக்கு கட்டாயம் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும்
தன்னம்பிக்கை இழந்ததினாலேயே 4 தடவைகள் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை -கோத்பாய.
நாட்டிலுள்ள இளைஞர் மற்றும் யுவதி களுக்கு கட்டாயாமாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டுமெனவும், இளம் தலைமுறையினரின் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு தலைமை த்துவ பயிற்சி மிகவும் முக்கியமானது என நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்பாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர்களுக்கு கேணல் பட்டங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு தலைமைத்துவ பயிற்சி வழங்குவதன் மூலம் அவர்கள் எந்தவொரு தீர்மானங்களையும் சுயமான முறையில் மேற்கொள்ளக் கூடிய வகையில் பயிற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தன்னம்பிக்கையை இழந்ததினாலேயே 4 தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பொற்றும் இலங்கை அணியினரால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment