ஐதராபாத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி
ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் அகர்வால். இவரது மனைவி ரிங்குதேவி (38). சமீபத்தில் சஞ்சய் அகர்வால் குடும்பத்துடன் ஹரித்துவாருக்கு சுற்றுலா சென்றார். அப்போது ரிங்குதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ஊர் திரும்பிய அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்தபோது பன்றிக் காய்ச்சல் தாக்கி இருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
0 comments :
Post a Comment