வங்களவிரிகுடாவில் திடீர் தாழமுக்கம் வடக்கு கிழக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
வங்கள விரிகுடாவில் ஏற்பட்ட திடீர் தாழமுக்கம் காரணமாக வடக்குஇ கிழக்கு மற்றும் வடகிழக்கைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ். கிழக்கு கடற்பரப்பில் 600 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காலநிலையில் மாற்றங்கள்ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் காற்றின் வேகம் அதிகரித்திருக்மென்றும் கடல் அலைகளின் வேகம் அதிகரித்திருக்குமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன்இ வடக்குஇ கிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில்; இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
0 comments :
Post a Comment