தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடும் இறுதி தறுவாயில் உள்ளது
த.தே.கூட்டமைப்பிற்குள் ஏற்ப்பட் டுள்ள முரண்பாடுகள் அக்கட்சியை பிளவுபட செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துமென அரசியல் ஆய்வாளர் கள் தெரிவிக்கின்றனர். தமிழ் கூட்ட மைப்பு பதிவு செய்யப்பட வேண்டு மென்ற கோரிக்கைகள் வலுப் பெற்றுள்ள நிலையில், அதில் பிரதான பாத்திரம் வகிக்கும் தமிழரசு கட்சி முரண்பாடுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழரசு கட்சி தொடர்ந்தும் விடாபிடியான போக்கை தொடர்ந்தால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் தவிர்க்கமுடியாதவை என தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை சுரேஷ் பிரேமச்சந்திர தலைமை யிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி, சித்தார்த்தன் தலைமையிலான ப்ளொட் ஆகிய 4 கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள் கட்சிக்குள் ளேயே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்த முனையும் இக்கட்டத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது சட்டரீதியான வலுவான அமைப்பாக கூட்டமைப்பை பலப்படுத்துவற்கு உதவாதென ஏனைய 4 கட்சிகளும் தெரிவிக்கின்றன.
குறித்த நிலை தொடர்ந்தும் நீடிக்கும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்ப்பட்டு கூட்டமைப்பு சிதைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2 comments :
உண்மையில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சுத்தமானதல்ல. எல்லாமே சுத்துமாத்து, சுயநலம், போலிவேடம், கள்ளம், கபடம் கொண்டவை. இவ்வளவு காலமும் தமிழினத்தின் அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் புலிகள் மட்டுமல்ல இவர்களும் தான் காரணம். இனியும் இவர்களின் அசுத்தமான அரசியல் தமிழ் மக்களுக்கு வேண்டாம்.
பழைய கதையை தொடராமல், புதியதோர் அத்தியாத்தில், புதிய சிந்தனை, செயற்பாடுகளை நோக்கி, நீதி, நேர்மை, நியாயம் உள்ளவர்கள் எவரும் கட்சி பேதம் இன்றி ஒன்று சேர்ந்து ஒரு புதிய கட்சியை உருவாகினால் மட்டுமே தமிழ் சமுதாயம் எதிர்காலத்தில் ஆரோகியமடையும், இல்லையேல் தமிழினத்தின் தலைவிதி மாற்றமடையாமல் தொடர்கதையாகி, இறுதியில் கிழக்கு மாகாணம் போல் வடக்கு மாகாணமும் பறிபோவது மட்டுமல்ல, முழு தமிழினமும்
பாதளகுளிக்குள் விழுந்து அழிந்து விடும் என்பதில் சந்தேமில்லை. இந்தோனசியாவை தமிழர் ஆண்ட சரித்திரம் போல் வடக்கு, கிழக்கில் சாட்சியங்கள் மட்டுமே மிஞ்சும்.
தமிழ் மக்களே சிந்தியுங்கள்.
நன்றி தமிழ் சமுதாயம்.
thank you very much.
but ... big but who is going to lead the new party? and .....
well people who already were in the polictics have to patiocipate in this new party but who will accept these people( they also bad people under rules of tiger's educated people and tamil racist?
please look at these people and who does better than others and support it because new and proper leadership will take some time may be another 40 years ...
we all in the koovam river out of us we need to find out one or two good people whoi are doing well at present rather than looking fully, because we are waiting for new leader... TNA should be fully band but any one out those parties can come out and form the new party, how about epdp they are doing well than TNA but againj but our people .. will they accept it ? ... well i am sorry to tell you tamil people never going to be happy or get after ever they want if they can not get in with this goverment ( please study about allthe gov since 1948). good bless these tamilo people ( onnce upon a time father Selva also said this ).
Post a Comment