Wednesday, October 3, 2012

பாலியல் அடிப்படையிலான வன்முறையை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைகின்றது நோர்வே

பாலியல் அடிப்படையிலான வன்முறை களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில், இலங்கையில் உண்ணாட்டு தரப்பின ருடன் இணைந்து செயல்படுவதற்கு, நோர்வே தூதரகம் ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தென்னாசியவில் இலங்கை முன்மாதிரியாகத் திகழ்கின்றது என்று இதன் போது ஐ.நா. இலங்கையைப் பாராட்டியுள்ளது.

ஆயுள் அதிகரிப்பில் பால் சமத்துவம், எழுத்தறிவு வீதச்சுட்டி, மற்றும் சுகாதார முன்னேற்றம் போன்றவை முக்கிய பங்காற்ற கூடிய காரணிகளாகும். எனினும், சவாலான இன்னும் பல விடயங்கள் முன்னிற்கின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கையருடன் நோர்வே இணைந்து செயல்படும் என்று இலங்கையில் உள்ள ஐ.நா பிரதிநிதி சுபானி நந்தி தெரிவிக்கின்றார்.

நிலையான அபிவிருத்திக்கு பெண்கள் வலுவூட்டப்படுவது அவசியமானது என்று நோர்வே திடமாக நம்புகிறது என்று ஐ.நா. இலங்கைப் பிரதிநிதி கிரேட் லோசன் தெரிவிக்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com