கடாபியின் இளைய மகன் கொலை.
லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன், நேற்று நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. லிபியாவை, 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆட்சி செய்த கடாபி, மக்கள் புரட்சியின் காரணமாக பதவியிலிருந்து இறக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை நேட்டோ படைகளின் உதவியோடு, கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு, ஆக., மாதம் சுட்டு கொன்றனர்.இந்நிலையில், கடாபியின் ஏழாவது மகன் கமீஸ் கடாபி, மிஸ்ரதா நகரில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக, லிபிய தேசிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.கமீஸ் கடாபிக்கு, 28. இன்னும் திருமணமாகவில்லை. இவரது மூத்த சகோதரர் சயீப், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment