பொன்சேகாவைப் பார்த்து ஐ.தே.க அச்சமடைய வேண்டியதில்லை – தயாசிரி.
எதிர்வரும் 18ம் திகதி சரத் பொன்சேகா தலைமையில் நடைபெறும் பொது வேலைத் திட்டத்தில் நானும் மேலும் பல ஐ.தே.க உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றோம். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பின்ர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், பொன்சேகா புதிய கட்சியையோ, புதிய கூட்டணியையோ அமைக்கவில்லை. வண. மாதுலுவேவ சோபித தேரர் ஆரம்பித்த வேலைத் திட்டத்தையே முன்னெடுத்துச் செல்கின்றார். ஃபூட்டா நடாத்திய கூட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொண்டுள்ளது. அது போன்றதேதான் சரத் பொன்சேகா நடாத்தும் கூட்டமும்.
எனவே, ஐ.தே.க எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி பா.ம.உறுப்பினர் தயாசிரி ஜயசேகர கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment