புதிய சட்ட நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
புதிய சட்ட நடைமுறை ஒன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற் கிணங்க வாகனங்களின் பிரதான முன்பக்க விளக்கை அதிக ஒளியுடன் இரவு நேரத்தில் ஒளிரச் செய்வது தண்டனைக்குரிய குற்றமென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதிக வெளிச்சத்துடன் முன் விளக்குகளை ஒளிரச் செய்யும் போது, எதிரே வரும் வாகன சாரதிகள் பாதிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிரேவரும் வாகனங்களின் அதிகூடிய வெளிச்சம் காரணமாகவே அதிக விபத்துக்கள் இடம் பெறுவதாக வாகன சாரதிகளின் முறைப்பாடுகளினூடாக தெரியவந்துள்ளது.
இதேவேளை விசேட சீர்திருத்த சட்டத்திற்கமைய புதிய சட்டநடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment