தொலைதொடர்பு செய்மதியை விண்ணிற்கு ஏவுகின்றது இலங்கை
முதலாவது இலங்கை தொலைதொடர்பு செய்மதி, எதிர்வரும் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 09.30 க்கு குறித்த செய்மதியை விண்ணில் ஏவுவதற்கு, திட்டமிடப்பட் டுள்ளது. குறித்த முதலாவது செய்மதி, சீனாவின் சின்வேங் செய்மதி மத்திய நிலையத்திலிருந்து சீன ஏவுகணையொன்றின் உதவியுடன், விண்ணில் ஏவப்படவுள்ளது.
விண்ணில் ஏவப்பட்டு 10 நிமிடங்களில், குறித்த செய்மதி இலங்கையின் கடல் பகுதிக்கு மேலாக பறக்கச்செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இலங்கை மற்றும் சீன தேசிய கொடிகள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த செய்மதியின் ஆயுட்காலம் 15 வருடங்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, கிழக்காபிரிக்கா உள்ளிட்ட பிராந்தியங்களுக்கு தொலைதொடர்பு சேவைகளை இலகுவாக வழங்க முடியும். அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரம் தொடக்கம், குறித்த தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment