சண்டி புயல் கிழக்கு அமெரிக்காவை தாக்கியுள்ளது.
சண்டி சூறாவளி அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சூறாவளி காரணமாக பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சண்டி சூறாவளியானது வலு குறைந்த கடும் காற்றாக நிவு ஜெர்சி பிராந்தியத்தை இன்று அதிகாலை கடந்து சென்றுள்ளது.
80 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த வலு குறைந்த காற்று வீசியதாக அமெரிக்க வானியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment