பெயர் குறிப்பிட்ட பாடசாலைக்கே செல்ல வேண்டும். மறுத்தால் நியமனங்களை இரத்துச்செய்க
பாடசாலைகளின் பெயர் குறிப்பிடப் பட்டு நியமனம் வழங்கப்படும் பாடசா லைகளிலேயே குறித்த ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டுமெனவும், அவ் வாறு நியமனத்தில் குறிப்பிடப்பட் டுள்ள பாடசாலைகளுக்குச் ஆசிரியர் கள் செல்ல மறுத்தால் அவர்களின் நியமனங்கள் இரத்துச்செய்யப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே பலமுறை தாம் வலியுறுத் தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர் நியமனத்தின்போது தற்போது பெயர் குறிப்பிட்டே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், பல வழிகளில் செல்வாக்குகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தமது பாடசாலைகளைத் தமக்கு வசதியாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இது விடயத்தில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்வாறு செயற்படும் ஆசியர்களுக்கு எந்தவித பாரபட்ச முமின்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, குறித்த பாடசாலைகளில் நியமனங்களைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களின் நியமனங்களை இரத்துச் செய்ய நேரிடுமெனவும் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆசியர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment