மரண தண்டனை நடைமுறையானால் தமிழ் புகலிடக்காரர்கள் ஒக்சிசன் பெறுவர்.
எதிர் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால் அது தமிழ் புலிப் புகலிடக்காரர்களுக்கு ஒக்சிசன் கொடுப்பது போலாகும் என்று இலங்கை மனிதவுரிமை ஆணையத் தின் ஆணையர் சட்டத்தரணி பிரதீபா மகாநாம தெரிவிக்கின்றார்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால் இந்த ஒக்டோபர், நவம்பர் மற்றும் வரும் மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறும் மனிதவுரிமை சபையில் இது நாட்டுக்கு கெட்ட பெயரைக் கொண்டு வரும் எனவும் தெரிவித்துள்ளார்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்கல், அவர்களுக்கு தண்டனையை நிர்ணயித்தல், மற்றும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குதல் போன்றவை, நவநீதம்பிள்ளையினால் ஜெனிவா மனிதவுரிமை ஆணையத்துக்கு கையளிக்க விருக்கும் அறிக்கைக்கு தலைப்பு வைத்தது போலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment