ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பா? திறந்த பல்லைக்கழகத்தில விசேட பாட நெறிகள்!
ஐரோப்பிய நாடுகளில் தொழில்வாய்ப் புக்களை பெற்றுக்கொள்வதற்காக திறந்த பல்லைக்கழகத்தில் பயிற்சிப் பாடநெறி கள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும், ஐரோப்பா உட்பட வளர்ச்சி யடைந்த நாடுகளின் தொழிலுக்காக பணியாளர் களை அனுப்பும் விடயத்தில் அவதானத் துடன் செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் வளர்ச்சியடைந்த நாடுகளில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை பராமரிக்கும் சேவையில் இலங்கையர்களை ஈடுபடுத்த சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் அவசியமாகும். இதற்காக மஹிந்த சிந்தனைக்கமைய விசேட பாட நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திறந்த பல்கலைக்கழகத்தில் பாடநெறிகள் பயிற்றுவிக் கப்படும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. முதியோர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது. எனினும் குறித்த துறை தொடர்பில் இலங்கையர்கள் கவனம் செலுத்துவது குறைவாகும். இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முதியவர்களை பராமரிக்கும் துறை தொடர்பில் தற்போது கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment