இலங்கையில் இலத்திரனியல் வாக்களிப்பு முறை! தினேஷ் குணவர்தன
இலங்கையில் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மொரட் டுவை பல்கலைக்கழகம் வாக்களிப்பு இயந்திரமொன்றை தயாரித்துள்ளதாக தேர்தல் திருத்தம் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட மின்னனு வாக்கப்பதிவு இயந்திரம் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர். வினைத்திறன், நம்பகத்தன்மை என்பவற்றை அதிகரிக்கும் வகையில் இலத்திரனியல் வாக்களிப்பு முறை அமைய வேண்டும். இலத்திரனியல் வாக்களிப்பை அறிமுகப்படுத்த சட்டத்திருத்தங்களும் தேவைப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இலத்திர னியல் வாக்களிப்பு முறைக்கு பயன்படுத்த பொருத்தமான இயந்திரத்தை சிபாரிசு செய்ய வேண்டும். இதேவேளை வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை தொடர்பில் வாக்காளர்களுக்கும் பயற்சியளிக்க வேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment