கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேலிய கடற்படையினர், கப்பலை கைப்பற்றியுள்ளனர்
காசா நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று, இஸ்ரேலிய கடற்படை யினரால் தாக்குதலுக்கு உள்ளாகியு ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்ப லுக்குள் ஏறிய இஸ்ரேலிய கடற்படை யினர், கப்பலை கைப்பற்றி இஸ்ரே லிய துறைமுகமான ஆஷ்டாட்டுக்கு கொண்டு செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை, காசா நோக்கி சென்று கொண்டிருந்த சுவீடன் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் எஸ்டெல், இஸ்ரேலிய கடற்படை தாக்குதல் படகுகளால் நடுக்கடலில் வைத்து முற்றுகையிடப் பட்டுள்ளது கப்பல், பின்லாந்தில் பதிவு செய்யப்பட்டு, அந்த நாட்டுக் கொடியுடன் சென்றுகொண்டிருந்தது. இந்தக் கப்பலில், காசா மீதான கடல் தடைகளை எதிர்த்துக் குரல் கொடுப்போர் பயணம் செய்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. காசாவை கடல் வழியே சென்றடைய இஸ்ரேல் கடை செய்துள்ள காரணத்தால், தடையை மீறி பயணம் செய்துகொண்டிருந்தது எஸ்டெல்.
இஸ்ரேலிய கடற்படையின் தகவல் தொடர்பாளர், எஸ்டெல் கப்பல் தாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். கப்பலை கடற்படையினர் தாக்கவில்லை. கப்பலுக்குள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏறி கைப்பற்றினர் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கப்பலில் இருந்தவர்கள் இவரின் கருத்தை மறுத்துள்ளனர். நேற்று காலை கப்பல் இடைமறிக்கப்பட்டவுடன், கப்பலில் இருந்து செல்போன் மூலம் தொடர்புகொண்ட பயணி ஒருவர், கப்பல், இஸ்ரேலிய கடற்படை படகுகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவர்கள் கப்பலை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி நெருங்குகிறார்கள் என்று தெரிவித்தார்.
காசாவுக்கான கப்பல் சுவீடன் எதிர்ப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா ஸ்ட்ரான்ட், எஸ்டெல் தாக்குதலுக்கு உள்ளாகிறது. கப்பலில் உள்ள எமது குழுவினரிடம் இருந்து கிடைத்த தகவல் இது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலை, கடற்படை தாக்குதல் படகுகள் பின்தொடர்கின்றன என்பதை கப்பலி உள்ளவர்கள் உறுதி செய்தனர் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்குவழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
காசாவுக்கான கப்பல் எதிர்ப்பு குழுவின் சார்பில் 30 பேர், இந்தக் கப்பலில் பயணம் செய்தனர். இவர்கள், சில ஐரோப்பிய, ஸ்கான்டிநேவிய நாடுகள், இஸ்ரேல், மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்கள். காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்கள், மற்றும் அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தகங்கள் ஆகியவற்றை தம்முடன் கப்பலில் எடுத்துச் சென்றார்கள் இவர்கள்.
இஸ்ரேலிய ராணுவ ரேடியோ ஒலிபரப்பில், எஸ்டெல் கப்பலை தடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டுமே வெளியானது. எப்படி தடுத்தார்கள் என்று கூறப்படவில்லை. மனிதாபிமான பயணமாக இது கருதப்படுவதால், கப்பல்மீது தாக்குதல் நடத்தியிருந்தால், இஸ்ரேல் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் என்பதால், தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் மறைக்கிறது என்று கருதப்படுகிறது.
காசாவுக்கான கடல் பாதைகளை இஸ்ரேல் அடைத்ததை எதிர்த்து, தடையை மீறி பயணம் செல்ல முயலும் முயற்சியில் ஏற்கனவே சில கப்பல்கள் ஈடுபட்டன. அவை அனைத்தும் இஸ்ரேலிய கடற்படையினரால் தடுக்கவும் பட்டன. 2007-ம் ஆண்டில் இருந்து இந்த கடல் தடை அமலில் உள்ளது. தற்போது இஸ்ரேலிய கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ள எஸ்டெல் கப்பல், கடந்த 7-ம் தேதி இத்தாலிய துறைமுகம் நப்பிள்ஸில் இருந்து பயணத்தை தொடங்கியது.
தற்போது, இஸ்ரேலியக் கடற்படையால் தெற்கு மெடிட்டெரேனியன் கடலில் செலுத்திச் செல்லப்படுவதால், ஆஷ்டாட் துறைமுகத்தை சென்றடையப் போகிறது. காசா மீது இஸ்ரேல் விதித்துள்ள கடல் தடை, பாலஸ்தீன அப்பாவி மக்களுக்கு வழங்கப்பட்ட அநியாய தண்டனை என்கிறது காசாவுக்கான கப்பல் எதிர்ப்பு குழு. காசாவில் 1.6 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
இஸ்ரேலின் கடல் தடையை உடைப்பதற்கு செய்யப்பட்ட முயற்சியாக, கடந்த மே 2010ல் 6 கப்பல்கள் ஒரு குழுவாக சென்றன. அப்போது, இஸ்ரேலிய கடற்படை அந்தக் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தியபோது, அதிலிருந்த 9 துருக்கி பிரஜைகள் கொல்லப்பட்டனர். அப்போது இது தொடர்பாக ஐ.நா. விசாரணைக்கு உத்தரவிட்டார், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். விசாரணையின் முடிவில், காசாவுக்கான கடல் பாதையை இஸ்ரேல் சட்ட ரீதியாகவே மூடியுள்ளது. அதை மூடுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், தடையை மீறுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதுதான், நேற்று எஸ்டெல் கப்பலை தடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதுடன் கதையை முடித்துக் கொண்ட இஸ்ரேல், தாக்குதல் நடத்தியதை மறுத்துள்ளது.
0 comments :
Post a Comment