வாயிலிருந்து வரும் வார்த்தைகளை யோசித்து விடட்டாம் - இலங்கை ஜம்மியத்துல் உலமா
கிரிக்கெட் விளையாட்டின் போது நிதானம் பேணி நாட்டின் ஐக்கியத் திற்கும், இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள் ளுமாறு அகில இலங்கை ஜம்மி யத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.சி.சி உலக கிண்ண 20டி 20டி தொடரின் போட்டிகளில் ஏதாவதொரு நாடு வெற்றிபெறலாம். ஆனால் வெற்றியின் பின்னர் நமது நாட்டின் ஐக்கியத்திற்கும், இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சலகரும் நடந்துக்கொள்ள வேண்டுமென ஜம்மியத்துல் உலமா கேட்டுள்ளது. இன்றைய தினம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதவுள்ளன.
அதில் இலங்கை அணி வெற்றிபெரும் பட்சத்தில் பாகிஸ்தான் நாட்டுக்கோ அந்நாட்டில் வாழும் பெரும்பான்மையாகவிருக்கும் முஸ்லிம்களுக்கோ அதே போல் எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பிரயோகிப்பதை தடுத்துக்கொள்ள வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.
இது இலங்கையிலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். அதே போல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் அதனை ஒரு இனத்திற்கோ சமயத்திற்கோ கிடைத்த வெற்றியாக கருதமுடியாது. அதன்காரணமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் பாகிஸ்தானியரின் வெற்றியை கொண்டாட முயலக்கூடாதென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment