கிளிநொச்சியில் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் நடமாடும் சேவை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவானது தனது சேவையை கிளிநொச்சி மாவட் டத்திற்கு விஸ்தரிக்க உள்ளது என யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்
யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களின் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளை முறையிட நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் கிளிநொச்சி நடமாடும் சேவை இயங்கவுள்ளதாகவும், இந்த நாடாடும் சேவையானது கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இடம்பெற உள்ளது எனவும், அவர் தெரிவித்துள்ளார்
இவ்வாறு கிளிநொச்சியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவையை விஸ்தரித்ததன் பின்னர், மனித உரிமைகள் தொடர்பாக பொதுமக்களும் அரச அலுவலர்களும் தங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment