மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் அந்நாட்டுப் பொலிஸாரினால் இன்று கைதுசெய்ய ப்பட்டுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறிய காரணத்தாலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment