வட பகுதி மக்களுக்கு சிங்களத்தின் மேலுள்ள மோகம் அதிகரித்துள்ளதாம் -.ரவி
வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது என, தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ஏ.ரவி குமார் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின், வடக்கிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் சிங்கள மக்களிடம் அங்குள்ள தமிழ் மக்கள் சிங்கள மொழியில் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், சிங்கள மொழியை கற்றுக்கொள்வதற்கு உணர்வுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்து சேவைகளிலும், வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள வடபகுதி மக்கள், சிங்கள மக்களிடம் சிங்கள மொழியிலேயே தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித் துள்ளார்.
அத்துடன் சிங்கள மொழியை கற்கவேண்டிய தேவை குறித்து அவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள விழிப்புணர்வினால், சிங்கள் மொழியை கற்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர் என்றும், வடபகுதியின் பல்வேறு பிரதேசங்களில் சிங்கள மொழியை கற்றுக் கொடுப்பதற்கான தனியார் வகுப்புகள் செயற்ப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment