Friday, October 12, 2012

பாராளுமன்றத்தில் ஆழ்ந்த நித்திரையில் ஹிஸ்புல்லாஹ்! ஊழியரால் தட்டி எழுப்பப்பட்டார்!

விமான விபத்துக்களை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற் கான பிரேரணை தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்க ப்பட்டது. அந்த விவாதத்தில் உரையா ற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அழைத்த போது, பாராளுமன்றத்திற்கு உள்ளேயே அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சபைக்குத் தலைமை தாங்கிய குழப் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமாரினால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் இரண்டு தடவை அழைக்கப்பட்டபோதும், அவர் எழுந்திருக்காததை அவதானித்த சபை ஊழியர் ஒருவர் ஓடிவந்து பிரதியமைச்சரை தட்டி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து திடுக்கிட்டு எழுந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்னை சுதாகரித்துக்கொண்டதுடன், சில விநாடிகள் அமர்ந்திருந்தவாறே பாதணிகளை அணிந்து கொண்டு எழுந்து நின்று உரையாற்றியுள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி பிரேரணை மீது ஜனநாயக தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியதன் பின்னர் ஆளும் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்திலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அழைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

1 comments :

ARYA ,  October 13, 2012 at 2:06 AM  

இப்படியானவர்கள் சவுதி அரேபியாக்கு போனால் நல்ல தூங்கலாம் , ஏன் எங்கட நாட்டை சீரழிக்கின்றான்கள் ????????

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com