Saturday, October 6, 2012

யாழ். அகோர விபத்தில் சிக்கியவர்களின் நிலமை கவலைக்கிடம்

யாழ்ப்பாணம் இருபாளையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர் களில் சிலரின் நிலமை கவலைக்கிட மாகவுள்ளதாக யாழ் போதனா வைத்தி யசாலையினர் தெரிவிக்கின்றனர். பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மினி பஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிசென்ற பஸ் ஒன்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் இருபாளை கட்பகப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஒன்றுக்கொண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

அவ்விபத்தில் இரண்டு பஸ்சின் சாரதிகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த நிலையில் 13 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந் துள்ளதாகவும், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும். பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

யாழ்- பருத்தித்துறை வீதியின் புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com