கட்சி பதிவது அல்ல தமிழ் மக்கள் முன்நிற்கும் முக்கிய பிரச்சினை! சம்பந்தன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற பங்காளிக்கட்சிகளின் வேண்டுதல் தொடர்பான உட்வீட்டுபூசல் பூதாகரமாக வெளிவரத்தொடங்கியுள்ள நிலையில், இக்கட்சிப்பதிவானது தற்போது தமிழ் மக்களின் தேவை அல்ல எனவும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்வதே மக்களுக்கு அவசியமானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது, இது தொடர்பில் பேசப்பட்டபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த முறை இந்தியா சென்றபோது சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரை அழைத்துச் செல்லாமைக்கான காரணம் கோரப்பட்டபோது, உரிய பதிலளிக்காமல் சம்பந்தன் மழுப்பியதாக அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment