முல்லையில் கடும் மழை இடம்பெயர்ந்த மக்களுக்கு இராணுவம் உதவிக்கரம் நீட்டுகிறது
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடை மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிக மழையும் ,கடும் காற்றும் வீசியது. இதனால் மீளக்குடியமர்ந்த பொது மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளானார்கள்.
இவர்கள் அங்குள்ள பாடசாலைகள் மற்றும் தேவாலயங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்தனர். இவர்கள் சாப்பாடின்றி மிகவும் கஸ்ரங்களை அனுபவித்தபோது இராணுவத்தினர் பொது மக்களுக்கு தேவையான உணவுகளை மூன்று நேரமும் சமைத்து வழங்கினார்கள்.
அத்தோடு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீட்புப் பணிகளையும் மேற்கொண்டனர். இதேவேளை தற்போது சில மணித்தியாலயங்கள் மழை பெய்யாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதோடு கடும் குளீர் நிலவி வருகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் மாவட்டச் செயலகம் மற்றும் இராணுவத்தினர் மூலம் மேற்கொண்டு வருகின்றது.
0 comments :
Post a Comment