இரண்டாவது முறையாக துருக்கியில் பலவந்தமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்
துருக்கியில் ஆர்மேனிய நாட்டு விமானம் ஒன்று, நேற்று துருக்கி விமானப்படை போர் விமானங்க ளால் வானில் இடைமறிக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்மேனிய நாட்டு விமானம் சிரியா நோக்கி சென்று கொண்டிரு ந்த போதே அவ்வாறு இடைமறிக் கப்பட்டு, தரையிறக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலிபோ நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. அலிபோவில் தற்போது சிரியா நாட்டு ராணுவத்துக்கும் போராளிகள் அமைப்புக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த விமானம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்மேனிய விமானம் துருக்கி வான் எல்லையில் பறக்க அனுமதி கோரியது. 'சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அனுமதி வழங்கப்படும்' என்று கூறிய துருக்கி, தமது விமானப்படை போர் விமானங்கள் இரண்டை வானுக்கு அனுப்பியது. ஆர்மேனிய விமானத்தின் இரு பக்கத்திலும் பறந்த போர் விமானங்கள், ஆர்மேனிய விமானத்தை அங்காரா விமான நிலையத்தில் தரையிறக்குமாறு உத்தரவிட்டன.
தற்போது, அங்காரா விமான நிலையத்தில் வைத்து, ஆர்மேனிய விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள சரக்ககள் சோதனையிடப்படுவதாகவும் அவற்றில் ராணுவ பொருட்கள் ஏதும் இல்லாவிட்டால், தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment