இலங்கையில் நல்ல எதிர்க்கட்சிகள் இல்லையாம்
இலங்கையில் நல்ல எதிர்க்கட்சிகள் இல்லை என்றும், அரசாங்கத்திற்கு அடிபணிந்து செல்லும் கட்சிகள்தான் காணப்படுகின்றன எனவும், இதனால் மக்கள் தங்கள் துன்ப துயரங்களை தெய்வத்திடம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்று, ராமஞ்ஞ நிகாயாவின் அனுனாயக்க வண.கிராம்பே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சாரானந்த பிரிவேனாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை வரவேற்கும் முகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐ.தே.க வின் முன்னாள் பிரதித் தலைவர் கரு. ஜயசூரியா, ரங்கே பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நாட்டை பொறுப்பு கொடுப்பதற்கு பலமுள்ள எதிர்க்கட்சி இருக்க வேண்டும். பொன்சேகா அதற்குப் பொருத்தமானவர் என்றும் வண. ஆனந்த தேர்ர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment