Wednesday, October 17, 2012

விழிப்புடன் செயற்படுக - வளிமண்டலவியல் திணைக்களம்

இடைக்கால பருவ பெயர்ச்சி மழை ஆரம்பமானதை தொடர்ந்து, பலத்த மழை நாடெங்கும் பெய்து வருகின்றது எனவும், இடி மின்னல் தாக்கங்கள் மற்றும் வாகனங்களை செலுத்தும் போதும் கவனமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுள்ளது. மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்து வருகின்றது எனவும், இடைக்கால பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளமையே இதற்கான காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பலத்தை மழையை தொடர்ந்து இடி மின்னல் தாக்க அபாயமும் காணப்படுகின்றது. இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு மக்களை கேட்டுள்ளது. நாட்டின் பல வீதிகளில் பனியுடன் கூடிய காலநிலையும் காணப்படுதாகவும் கொழும்பு, ஹட்டன் வீதியில் பனியுடன் கூடிய காலநிலை காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இன்று முழு நாளும் நாட்டின் பலபாகங்களிலும் பலத்த மழை பெய்யும். கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com