ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல்
இஸ்ரேலில் உள்நுழைந்த ஆளில்லா சிறியரக விமானமொன்றை அந்நாட்டு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இஸ்ரேலின் தென் பகுதிக்குள் ஆளில்லா விமானம் நுழைய முற்ப் பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள நெகெவ் பாலைவனத்தில் வைத்து விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த பகுதியிலிருந்து விமானம் இஸ்ரேலை நோக்கி வந்துள்ளது என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக குறித்த சிறியரக ஆளில்லா விமானம் நாட்டுக்குள் நுழைந்துள்ளதா என்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. விமானத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் இருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 நிமிடங்கள் இஸ்ரேலின் வான்பரப்பில் விமானம் பயணித்துள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விமானம் உள்நுழைந்தததை சாதாரண விடயமாக கருத்திற்கொள்ளவில்லையெனவும் இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment