கந்தளாயில் மாணிக்க கல் வெளிப்பாடு
கந்தளாய் வாவியின் அருகாமையில் மாணிக்கக் கற்கள் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதாக மாணிக்க கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. கந்தளாய் வாவியின் கரைப் பகுதிகளில் மாணிக்க கற்கள் வெளிப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து பிரதேச வாசிகள் பாரிய அளவில் நேற்று அங்கு சென்றிருந்தனர்.
மாணிக்க கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் நிமல் பண்டார இதுபற்றி தகவல் தருகையில், அதிக மழை காரணமாக வாவியின் கரைப்பகுதிகளிலும், அதற்கு அருகாமையிலும் மாணிக்க கற்கள் வெளிப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
அங்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாணிக்க கற்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட நிபுணர் ஒருவர் இன்று கந்தளாய் பிரதேசத்திற்கு அனுப்பபடவுள்ளதாகவும், பணிப்பாளர் தெரிவித்தார்;.
குறித்த பிரதிநிதியின் பரிந்துரைகளுக்கு அமைய கந்தளாய் வாவிக்கு அண்மையில் உள்ள பகுதிகளை மாணிக்க கல் அகழ்வதற்காக வழங்க முடியுமா என தீர்மானிக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment