Thursday, October 25, 2012

முன்னாள் ஜனாதிபதியின் மகன் இந்திய உளவுத்துறை 'ரா' வின் ஏஜென்ட்டாம்!' வீரவன்ச

'இந்திய உளவுத்துறையிடம் மில்லியன் கணக்கில் பணம் பெறுகின்றவர்கள், இலங்கையில் இந்திய நாட்டுப் பிரதிநிதியாக செயற்பட்டு, இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்' என்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதம் ஒன்றின்போது கேட்டுக்கொண்டுள்ளார் வீரவன்ச.

அவர் இவ்வாறு குறிப்பிட்டது, இலங்கை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகனும், தற்போது எம்.பி.யுமான சஜித் பிரேமதாஸவைப் பார்த்து!

இவ்வாறு நேரடியாக குற்றம்சாட்டிய அமைச்சர் 'முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ உயிருடன் இருந்தால், சஜித்தின் செயல்பாடுகளைப் பார்த்து, இப்படி ஒரு பிள்ளையா எனக்கு பிறந்தது என வருந்தி தற்கொலை செய்திருப்பார்' எனவும் விமல் மேலும் கூறினார்.

இந்திய உளவுத்துறை 'ரா'வின் இலங்கை ஏஜென்ட் என சஜித் பிரேமதாசவை பற்றி குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, 'இந்திய உளவுத்துறையிடம் இருந்து மாதமொன்றுக்கு 5 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு இந்திய பிரதிநிதியாக இலங்கையில் செயல்பட்டு, இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்' என்றார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச செய்ததே, இந்திய எதிர்ப்ப அரசியல்தான். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேற வேண்டும் என பிடிவாதம் பிடித்து, வெளியேற்றியவரும் அவர்தான். இப்போது அவரது மகன், இந்திய உளவுத்துறை ஏஜேன்ட் என்ற பூதத்தை கிளப்பியிருக்கிறார், வீரவன்ச.

1 comments :

Arya ,  October 26, 2012 at 2:21 AM  

Sajith is not RAW agent , Sampanthan, Suresh Premachandran and Selvam Adaikkalanathan are RAW agents already since 1980 , I had read at news RAW want Sinhalese language known agents now , but year 1988 also RAW wanted Sinhalese language known agents and asked to Suresh Premachandran in Palaly meeting with Tamil groups (This meetings was in october 1988) and suresh told , he will prepare EPRLF members who from up countries.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com