விரைவான அரசியல் தீர்வு வேண்டும். சமரசிங்கவிடம் பான் கீ மூன் வலியுறுத்தல்.
மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழ் பிரிவினைவாத போராளிகளை முறியடித்து வெற்றி கொண்ட உண்ணாட்டுப் போருக்குக் காரணமாக இருந்த அரசியல் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்று நியூயோக்கில் அமைச்சர் மகிந்த சமரசிங்காவிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் பொறுப்புக் கூறல் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் பிந்திய செயற்பாடுகளை தான் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார இன்று அவரது பேச்சாளர் கூறியுள்ளார்.
இருசாராரும் மனிதவுரிமை மீறல் குறங்களைச் செய்திருப்பதாகவும் அவற்றுக்கு இரு தரப்பினரும் பொறுப்பு கூறவேண்டும் என்றும் மூவர் கொண்ட பாங்-கீ-மூனின் அறிவுரைக் குழு ஏற்கனவே கூறியிருந்தது அறிந்த விடயமே.
அடுத்தமாதம் முதலாம் திகதி ஜெனிவாவில் நடைபெறும் மனிதவிரிமைச் சபையின் கூட்டத்தில் இலங்கையின் விடயம் பற்றி ஆராயப்படும். சபையின் ஒரு பிரிவான இந்த பன்னாட்டு பருவகால மீளாய்வில் இந்தியாவின் தலைமையில் ஸ்பெயின் மற்றும் பெனின் உள்ளிட்ட குழு இலங்கை மனிதவுரிமைகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிடும்.
இந்த மகாநாட்டுக்கு அமைச்சர் சமரசிங்க, அமைச்சர் பேரா. பீரிஸ், மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சார்ந்தோர் கலந்து கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment