கே.பி.க்கு எதிராக ஆதாரம் இல்லையாம்.
தாக்கல் செய்ய போதுமான சான்றாதாரங்களோ அல்லது முறைப்பாடுகளோ இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கே.பி.க்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு உரிய முறைப்பாடுகளும் சாட்சிகளும் இருக்க வேண்டுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஹுலுகல்ல,
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியில் ஈடுபடுத்துவது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
கே.பி தற்போது தடுப்புக் காவலில் இல்லை. அவர் தற்போது தொண்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.
புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனின் வீட்டுக்கு கே.பி விஜயம் செய்தமை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு பதிலளித்த ஹுலுகல்ல, அதற்கு கே.பி.க்கு உரிமையுள்ளது என்று கூறினார்.
புலிகளுடனான உச்சகட்ட மோதலின் போது, அவ்வியக்கத்தின் பிரதான ஆயுதக் கொள்வனவாளராக செயற்பட்ட கே.பி, சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment