Thursday, October 4, 2012

இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் வழங்க ப்படும் பயிற்சியில் எவ்வித மாற்றமும் இல்லை

இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தி யாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப் படும் எனவும், அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும், அத்துடன் ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு, இலங்கை பாதுகாப்பு செயலர்கள், இராணுவத் தளபதிகள், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தான் பயிற்சி பெற்று வருகின்றனர் எனவும், அதற்கு பிறகுதான் அவர்கள் மேற்பயிற்சிக்கு அமெரிக்கா செல்கின்றனர். எனவே, இந்த நடைமுறை தொடரும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை சுற்றுலா பயணிகள், தமிழகத்தில் தாக்கப்பட்டது எங்கள் உணர்வுகளை பாதிக்கச் செய்தது. இருப்பினும், இந்தியா மீதோ, இந்தியர்கள் மீதோ, நாங்கள் வெறுப்புக் கொள்ளவில்லை. இந்தியாவை நாங்கள் மூத்த சகோதரராக கருதுகிறோம். அந்த நாட்டிலேயே, இந்த மாதிரி விரும்பத்தகாத சம்பவம் நடந்தது எங்களை வருத்தம் அடைய செய்தது. இந்த சம்பவத்தால், யாருக்கும் இலாபம் இல்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பர் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com