வீட்டு உரிமையாளர்கள் ஒருசில மாதம் பொறுங்கோ! அனைத்தும் உங்களிடம் ஒப்படைக்கப்படும்
யாழ் மாவட்டத்தில் பொது மக்களின் வீடுகளில் தங்கியிருக்கும் இராணுவத் தினர், ஒருசில மாதங்களில் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரியா தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்பாணத்தில், பொது மக்களுக்கு சொந்தமான, 45 வீடுகளில், இராணுவத்தினர் தங்கியிருந்தனர். இவற்றில் 18 வீடுகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதுடன், அவ்வீடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இராணுவத்தினர் தங்கியிருப்பதற்கான கட்டிட வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை கட்டி முடிக்கப்பட்ட பினனர் ஒருசில மாதங்களில் மீதமுள்ள வீடுகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment