நீதவானிடம் இரகசிய வாக்குமூலம் கொடுத்தனர் இரட்டைக்கொலை சந்தேக நபர்கள்
கஹவத்த இரட்டைக்கொலை சந்தேக நபர்களிடமிருந்து, இரண்டு மணித்தியால ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. குறி த்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இறக்குவானை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, பெல்மடுல்ல மஜிஸ்திரேட் சாந்தனி நிரஞ்சலா டயஸ் முன்னிலையில், சந்தேக நபர் சம்பவம் தொடர்பாக, இரண்டு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் வழங்கினார்.
இதனையடுத்து, பலத்த பாதுகாப்புடன் எதிர்வரும் 16 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்குமாறு, மஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கொட்டகெத்தன கொலை சம்பவம் தொடர்பில் ஏனைய சந்தேகநபர்கள், குருவிட்ட சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment