புயலால் இந்திய மற்றும் அமெரிக்க பாதிப்பு
வங்காள விரிகுடாவில் தோன்றிய புயல் சின்னம் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மீனம்பாக்கம் முதல் கிண்டி வரையான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி வங்காள விரிகுடா கடலில், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது.
அது படிப்படியாக வலுப்பெற்று, நேற்று முன்தினம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது, மேற்கு நோக்கி நகர்ந்து, சென்னை - நாகப்பட்டினம் இடையே, தெற்கு, தென்கிழக்கு பகுதியில், நேற்று முன்தினம் காலை, 1,018.6 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகின்றது.
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.
இதனால் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாக அமெரிக்க வானியல் ஆராய்ச்சி நிலையம் தகவல் வெளியிடடுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது.
முறையான பராமரிப்பு இருந்த போதும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் உட்புக ஆரம்பித்துள்ளது.
இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நிலைமை மோசமாக ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நாட்டின் ஏனைய அணுஉலைகள் பாதுகாப்பாக இருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..
0 comments :
Post a Comment