உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள மனோ, விக்கிரமபாகு, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய
திவிநெகும சட்ட மூலத்தை எதிர்த்து ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் இன்று தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
வட மாகாணத்தில் வாழும் மக்களின் ஆணையையும், உடன்பாட்டையும் பிரதி நிதித்துவப்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்றும், மாகாணசபைகளின் நிதி வருவாய் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பொறுப்பெடுக்கும் அதிகாரத்தை இந்த சட்டம், மத்திய அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சருக்கு வழங்குகிறது என்றும் மனுதாரர்கள் தமது மனுக்களில் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை சட்டத்தரணி கிரிசாந்த வெலியமுன இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை உயர் நீதிமன்றில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment