யார் கூறினாலும் அமைச்சர் பதவியைத் துறக்க மாட்டேன் - பந்துல
இந்த நாட்டில் இலவசக் கல்விக்குச் சேவை செய்யும் பொருட்டு தயாரிக்கப் பட்டுள்ள சகல திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றி முடிக்கும் வரை, யார் கூறினாலும் கல்வி அமைச்சர் பதவியை விட்டு, வீட்டுக்குப் போகமாட்டேன் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குருணாகலை மலிய தேவா மகளிர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நாட்டில் இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் சேவையைச் செய்வதற்காக ஆயிரம் பாடசாலைகளை நாடு முழுதும் கட்டியெழுப்பும் வரை, நாங்கள் தினந்தோறும் நேரம் பிந்தித்தான் வீட்டுக்குச் செல்கின்றோம் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். இதனால், பந்துல குணவர்தன வீட்டுக்குப் போக வேண்டும் என்று எந்த கோயிலில் சென்று வேண்டிக்கொண்டாலும், திட்டங்களை நிறைவேற்றி முடிக்கும் வரைக்கும் நான் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment