அமெரிக்காவை கதிகலங்க வைத்த தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர இரட்டைக்கோபுர வர்த்தக மையம் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்கு தலில் பலியானவர்களுக்கு ஈரானும் அல்குவைதா அமைப்பும் 75 ஆயிரம் கோடி ரூபாவை நட்டயீடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் திகதி நிவ்யோர்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மைய இரட்டைகோபுரம் மீது விமானமத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 3000 பேர் பலியாகினர்
தாக்குதல் சம்பவத்தோடு ஈரான் ஆண்மீக தலைவர் ஆயத்துல்லா கொமேனி , ஹிஸ்புல்லா ஆயுததாரிகள், தலிபான் மற்றும் அல்குவைதா அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் 47 பேர் நட்டயீடு கோரி அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த நிவ்யோர்க் நீதிமன்ற நீதவான் ஜோர்ஜ் டேனியல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 35 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் நட்டயீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லா கொமேனிக்கும் அல்குவைதா அமைப்பிற்கும் தான் உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment